நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ 1,000 கோடி

229
Advertisement

2022- 2023 ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக அரசு தனது தேர்தல் அறிவிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் நகையை வைத்துப் பெற்றுள்ள கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று அறிவித்திருந்தது.

ஆட்சிக்கு வந்து 11 மாதங்கள் ஆகும் நிலையில், எப்போது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.