திருச்சி சந்துக்கடை அருகே, தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற கொள்ளையர்கள் 4 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்….

123
Advertisement

திருச்சி சந்துகடை பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் நகை பட்டறை கடை நடத்தி வருகிறார்.

குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த ஜோசப் திரும்பி வந்து பார்த்தபோது, கடையில் இருந்த 950 கிராம் தங்கம்,  வெள்ளி பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து, ஜோசப் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி, கருவாட்டுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரணிகுமார், சரவணன் ஆகிய இருவரையும் 4 மணி நேரத்தில் கைது செய்தனர்.  பரணிகுமார் வீட்டிலிருந்த நகைகளையும் மீட்டனர் இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை நேரில் சந்தித்து மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா பாராட்டு தெரிவிதார்.