முன்களப் பணியில் ரோபா

294
Advertisement

கொரோனாவைக் குணப்படுத்துவதில் முன்களப்
பணியாளர்களின் பங்கே முதன்மையாக உள்ளது.

முன்களப் பணியாளர்கள் பலரும் கொரோனா
தொற்றால் பலியாகியுள்ளனர். ஆனாலும், தங்கள்
உயிரைப் பெரிதுபடுத்தாமல் கொரோனா நோயாளிகளின்
உயிர்களைப் பாதுகாப்பதில் முன்களப் பணியில்
அயராது ஈடுபட்டுவருகின்றனர்.

முன்களப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டால்,
மருத்துவ சேவை பாதிக்கப்படும் என்பதால்,
தற்போது இப்பணியைச் செய்வதற்கென்று
ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் சிரா 03 என்னும் ரோபோவை
அந்நாட்டு எஞ்ஜினியர் ஒருவர் அரசாங்க
உதவியுடன் தயாரித்துள்ளார்.

ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த ரோபோ
10 மருத்துவப் பணியாளர்கள் செய்ய வேண்டிய
பணிகளைச் செய்கிறது. இதனால் கொரோனா
பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.

உடல் வெப்பப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை,
எக்ஸ் ரே, அல்ட்ரா சவுண்ட், இசிஜி ஆகிய
பரிசோதனைகளை நோயாளிகளின் அமர்ந்திருக்கும்
இடத்துக்கே சென்று மேற்கொள்கிறது.

பரிசோதனை ரிசல்ட்டை ரோபோவின் மார்பில்
உள்ள திரையில் தெரிந்துகொள்ளலாம். முகக்
கவசம் அணியாதவர்களை எச்சரிக்கிறது.
ஓராண்டாகப் பயன்பாட்டில் இந்த சிரா03
ரோபோ உள்ளது.

இதேபோன்று இன்னொரு ரோபோவும்
ஹாங்காங்கில் அண்மையில் கண்டு
பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோவுக்கு கிரேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
செவிலியர்களைப்போல நீலநிற உடையணிந்து
சேவையில் ஈடுபட்டுள்ளது இந்த ரோபோ.

ரோபோக்கள் கண்டுபிடிப்பு மருத்துவ உலகுக்கு
ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
விலை மதிப்பற்ற மனித உயிர்களை செயற்கை
மனிதர்களான ரோபோக்கள் பாடுபட்டுவருகிறது.

இதை உணர்ந்தாவது சமூக இடைவெளியைக்
கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்ற
பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும்
கடைப்பிடித்து உயிரைக் கொரோனாவிலிருந்து
காத்துக்கொள்ள வேண்டும்.