நெல்லையில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது

193
Advertisement

நெல்லையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மேலப்பாளையம் மாட்டுசந்தை அருகே, நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர்.

Advertisement

மினி ஆட்டோவில் 30 மூட்டைகளில் சுமார் ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து வாகனத்தை ஓட்டிவந்த வளதிராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

தாழையூத்து பகுதியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ரேஷன் அரிசியை கேரளாவுக்கு விற்பனை செய்ய எடுத்து சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, தாழையூத்து ராம்நகர் பகுதியை சேர்ந்த உடையார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.