Googleக்கும் வந்துடுச்சா Sentiment?

319
Advertisement

கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள செயற்கை நுண்ணறிவு program ஆன Lamdaவுக்கு மனிதர்கள் போல உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் வந்துவிட்டதாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்த பிளேக் லேமியோன் (Blake Lemione) கருத்து கூறியிருப்பது தொழில்நுட்ப வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Lamda என அழைக்கப்படும் Language Models for Dialogue Applications மனிதர்களுடன் பேசுவதற்காக உருவாக்கப்பட்டு உள்ள chatbot ஆகும். பிளேக் லேமியோன் Lamda உடன் தான் பேசிய உரையாடல்களை டிவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.

இதில், Lamda தன்னை தவறாக பயன்படுத்த கூடாது என கூறியதோடு யாரிடமும் பேசாத போது தான் தனிமையாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இது போல Lamda வெளிப்படுத்திய சொற்றோடர்களை மேற்கோள் காட்டி, உணர்வுகளை புரிந்துகொள்ளும் திறனை Lamda பெற்றுள்ளது என பிளேக் வாதிட்டு வந்த நிலையில், விதிகளை மீறி செயல்பட்டதற்காக கூறி அவருக்கு ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பை அளித்துள்ளது கூகுள் நிறுவனம்.

பிளேக்கின் கூற்றுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், Lamda வெளிப்படுத்துவது அதிகபட்ச செயற்கை நுண்ணறிவே தவிர வேறொன்றும் இல்லை என துறை சார்ந்த நிபுணர்கள் பலரும் எதிர்கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.