‘லியோ’ ஏன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகல? லோகேஷின் மாஸ்டர் பிளான்

204
Advertisement

தளபதி 67 டைட்டில் ப்ரோமோ வீடியோ வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளாக 22 மில்லியன் பார்வைகளை கடந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.

‘லியோ’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு ஒரு மாதம் முன்னதாகவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜையை தொடர்ந்து வரும் ஆறு நாள் விடுமுறையை குறிவைத்தே, லியோ படத்தை அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் தேதியாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல பெயர்கள் கணிக்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக லியோ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது போலவே, ரிலீஸ் தேதியும் ரசிகர்களுக்கு surprise ஆக வந்து சேர்ந்துள்ளது.

அப்டேட்களிலேயே இவ்வளவு சஸ்பென்ஸ் கொடுக்கும் லோகேஷ், படத்திலும் வித்தியாசம் காட்டுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.