இமாச்சலப் பிரதேசத்தில் காணப்பட்ட அரிய வகை பனிச் சிறுத்தை

242
Advertisement

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அரிய வகை பனிச் சிறுத்தை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த சிறுத்தை அந்த மாநிலத்தில் குளிர் பாலைவன மலை பள்ளத்தாக்கான ஸ்பிதி பள்ளத்தாக்கில் தென்பட்டுள்ளது. இதனை இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த சிறுத்தை நன்றாக வளர்ந்து இருந்ததாகவும். சுமார் 12500 அடி உயரத்தில் அது இருந்ததாகவும் போலீஸ் படையினர் தெரிவித்துள்ளனர். இமயமலைப் பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாத்து மீட்டெடுக்க போலீஸ் படையினர் உறுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.


மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் உள்ள மலைத்தொடர்களில் Ounce என அழைக்கப்படும் இந்த பனிச் சிறுத்தைகள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் உயிரினங்களில் இந்த இனம் IUCN சிகப்பு பட்டியலில் உள்ளது. வேட்டையாடுதல் மற்றும் அதன் வாழ்விடங்களை ஆக்கிரமித்து வருவது அழிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.3000 முதல் 4500 மீட்டர் உயரத்தில் இவை வாழக்கூடியவையாம். வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும் இருந்த சிறுத்தையின் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் கருப்பு பேட்ச் இருக்குமாம். இதன் கண்கள் பழுப்பு பச்சை அல்லது சாம்பல் நிறத்தில் இருக்குமாம்.