ஆளைக் கொல்லும் அரிய வகை மீன்
மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி
மாவட்டம், உப்பலகுப்தா பகுதியை
அடுத்துள்ள வசலத்திப்பா என்னும்
இடத்தில் சில நாட்களுக்குமுன் மீனவர்கள்
மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் வீசிய
வலையில் மனிதர்களைக் கொல்லும்
விஷத்தன்மை உள்ள குளோப் மீன் சிக்கியது.
அதனைக் கடற்கரைக்குக் கொண்டுவந்தபோது
ஏராளமானோர் பார்க்கக் கூடினர்.
பலூன் மீன், பப்ரா மீன், குளோப் மீன் என்று
பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த
மீன் தண்ணீரில் சாதாரணமாக இருக்கும்.
தனக்கு ஆபத்து என்றாலோ யாராவது தன்னைத்
தொட்டாலோ உடனே தனது உடலில் காற்றை
நிரப்பிக்கொண்டு பலூன்போல மாறிவிடும்.
மனிதர்களைக் குறிப்பாக, மீனவர்களை நடுநடுங்க
வைக்கும் இந்த குளோப் மீன் இணையத்தில்
வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.