32 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிய கருப்பு வைரம் ஆபரணப் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.
சமீபத்தில் லண்டன், துபாய், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் வைரக் கண்காட்சி நடந்தது. அந்தக் கண்காட்சியில் பல்வேறு வகையான வைரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதில், தி எனிக்மா எனப்படும் அரிதான, மிகவும் பழமையான வைரமும் இடம்பெற்றிருந்தது.
555.55 கேரட், 55 முகம் கொண்டுள்ள தி எனிக்மா வைரத்தை லண்டனில் நடந்த ஏலத்தில் 3.16 மில்லியன் டாலருக்கு அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 32 கோடி ரூபாய்க்கு ஒருவர் வாங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்தக் கருப்பு வைரம் உலகின் மிகப்பெரிய வைரமாகக் கருதப்படுகிறது. இது 2.6 பில்லியன் ஆண்டுகளுக்குமுன்பு பூமியை ஒரு விண்கல் அல்லது சிறுகோள் தாக்கியபோது உருவானதாக நம்பப்படுகிறது.
இந்த வகை வைரம் பூமியின் மேற்பரப்பிலேயே கிடைக்கின்றன.