பொம்மை நாயகனான யோகிபாபு… பா. ரஞ்சித் தயாரிப்பில்

285
Advertisement

பா.ரஞ்சித் கடைசியாக சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். சென்ற வருடம் வெளியான அந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தை எடுத்தார். விரைவில் அப்படம் வெளியாக உள்ளது.பா. ரஞ்சித் படங்கள் இயக்குவதுடன் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தொடர்ச்சியாக படங்களை தயாரித்தும் வருகிறார்.சமீபத்தில் கூட அவரது தயாரிப்பில் வெளியான ரைட்டர் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.

அதனை தொடர்ந்து அவர் தயாரித்திருக்கும் குதிரைவால் திரைப்படம் மார்ச் 18ஆம் தேதி திரைக்கு வருகிறது. கலையரசன் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பொம்மை நாயகி என்ற படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார். அவருடன் யாழினி பிலிம்ஸ் சேர்ந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது.
பொம்மை நாயகியை ஷான் எழுதி இயக்குகிறார். இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா எடிட்டிங்கை கவனிக்க, கலை இயக்குனராக ஜெயரகு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் போஸ்டரில் இருந்து கடலும் கடல் சார்ந்த கதையுமாக பொம்மை நாயகி இருக்கக் கூடும் என தெரிகிறது.

இதனை தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார். அத்துடன் ஆதிவாசி மக்களுக்காகப் போராடிய பிர்சா முண்டா வின் வாழ்க்கை வரலாறை இந்தியில் இயக்க இருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.