பல்ஸ் ஆக்ஸிமீட்டர்

353
Advertisement

நீரிழிவுக் குறைபாட்டாலோ கொரோனா தொற்றாலோ
உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால், அது ஆபத்தாகும்
வாய்ப்புள்ளது.

சிலர் மரணத்தை தழுவும் நிலையும் உள்ளது. இதனால்
ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அறிந்துகொள்ளும் ஆர்வம்
அதிகரித்துள்ளது. இதற்காக பல்ஸ் ஆக்ஸிமீட்டர் என்னும்
கருவி தற்போது அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது.

இந்தக் கருவி கொரோனா காலத்தில் சட்டென்று பிரபலமாகிவிட்டது.

இந்தக் கருவி, துணியை வெயிலில் உலரவைக்கும்போது
கொடிகளில் துணிகளை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும்
கிளிப் போல உள்ளது.

இது ஓர் எலக்ட்ரானிக் கருவி. மிகச்சிறிய, கையடக்கமான
இந்தக் கருவியை ஆன்செய்து கால்பெருவிரல் அல்லது கைப்
பெருவிரலில் பொருத்தினால் ஒரு நிமிடத்தில் ரத்தத்தில் உள்ள
ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிந்துவிடுகிறது.

விரலில் பொருத்தியவுடன் ஆக்ஸிமீட்டரிலிருந்து வெளிப்படும்
ஒளி, விரல் தசையை ஊடுருவிச்செல்கிறது. அங்கு சென்றதும்
இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு கணக்கிடப்பட்டு
மேல்பகுதியில் உள்ள சிறிய திரையில் தெரிகிறது.

எவ்வித வலியும் இல்லாமல் சுலபமாகவும் விரைவாகவும்
இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிகிறது.

இந்தப் பல்ஸ் மீட்டர் கருவியை எந்த விரலில் வேண்டுமானாலும்
பொருத்திக்கொள்ளலாம். எனினும், நடுவிரலில் பொருத்தி
அளவைக் காண்பதே சிறந்தது,

உடலில் ஆக்ஸிஜன் மொத்த அளவு 95 சதவிகிதத்துக்கு
அதிகமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஒரு நாளைக்கு காலை, மதியம், மாலை, இரவு என நான்கு
வேளை மட்டும் இந்த முறையில் நம் உடம்பிலுள்ள ஆக்ஸிஜன்
அளவை வீட்டிலிருந்தே அறிந்துகொள்ளலாம் என்பதும்
மருத்துவர்களின் கருத்து,

இதயத்திலிருந்து உடலின் பிற பாகங்களுக்கு எவ்வளவு விரைவாக
ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதையும் இக்கருவிமூலம்
கண்டறியமுடியும்.