PTR பழனிவேல் தியாகராஜன் விலகல்.. சூடுபிடிக்கும் GST கவுன்சில்; அமைச்சர்கள் குழுவில் மாற்றம்!!

238
Advertisement

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு, தமிழ்நாட்டில் அமைச்சர்கள் குழு மாற்றத்திற்குப் பின்பும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலில் மூன்று அமைச்சர்கள் குழுவை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அரசுக்கு பெரும் வருவாயை ஈட்டி தரும் வேளையில் அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்து பொருட்களுக்கும் சரியான வரி விதிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதோடு, அரசின் வருவாய் அதிகரிக்கும் முயற்சியில் மக்களுக்கு கூடுதல் வரி விதிக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பல்வேறு அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளது.

இந்த குழு உறுப்பினர்கள் தான் ஜிஎஸ்டி எனப்படும் மறைமுக வரி விதிப்பு முறையின் முக்கியமான சீர்திருத்தங்களை பரிந்துரைக்கும் பணிகள் உள்ளன. அமைச்சர்கள் பரிந்துரை, ஆய்வு முடிவுகள் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் வரி விதிப்பு குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. நியமிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலில் மொத்தம் 33 பேர், இதில் தலைவராக மத்திய நிதியமைச்சரும், உறுப்பினராக மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய் பிரிவின் மாநில அரசின் உறுப்பினர் என இருவர் அரசு சார்பிலும். அதில் 31 பேரில் 28 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேசத்தின் உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் 31 உறுப்பினர்களில் பெரும்பாலும் அம்மாநிலத்தின் நிதியமைச்சர்கள் இடம்பெறுவார்கள். ஆனால் மாநில அரசு நிதித்துறை, வரி துறை அல்லது பிற துறை அமைச்சர்களை கூட பரிந்துரை செய்யலாம்.

பசவராஜ் பொம்மை அவர்கள் பதவி விலகிய நிலையில் புதிய ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழுவின் தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான PTR பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி கவுன்சிலின் இரண்டு முக்கிய அமைச்சரவை குழுவில் உறுப்பினராக உள்ளார்.