செல்லப் பிராணிகளை விற்கத் தடை

317
Advertisement

செல்லப் பிராணிகளை விற்பனை செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ள விஷயம் செல்லப்பிராணி வளர்ப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அதிர்ச்சி அடையவேண்டியவர்கள் நாமல்ல, ஸ்பெயின் நாட்டுக்காரர்கள்தான். அந்த நாட்டில்தான் செல்லப் பிராணிகளை விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கும் மசோதா ஒன்றை அந்நாட்டு அரசு கொண்டுவந்துள்ளது.

சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அந்த மசோதா, செல்லப்பிராணிகளைக் கடைகளில் விற்கத் தடைவிதிக்கவும், உயிரியல் பூங்காக்களை விலங்குகள் மீட்பு மையங்களாக மாற்றவும் வழிசெய்கிறது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு சிறைத் தண்டனை அளிக்கவும் இடமளிக்கிறது.

சர்க்கஸில் காட்டு விலங்குகள் பயன்படுத்தப்படுதல், கால்நடை மருத்துவர்களால் விலங்குகள் கருணைக்கொலை செய்யப்படுதல் ஆகியவற்றைத் தவிர, செல்லப் பிராணிகள் கொல்லப்படுவதை இந்த மசோதா தடைசெய்யும்.

ஒருவேளை செல்லப்பிராணிகள் துன்புறுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை செய்யப்பட நேர்ந்தால் அவற்றின் உரிமையாளர்களுக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனையும், சிகிச்சையின்போது அவை இறந்துபோனால் 24 மாதங்கள் சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும்.

இனிமேல், கடைகளில் வைத்து செல்லப் பிராணிகளை விற்கவோ, அவற்றைக் காட்சிப்படுத்தி வைக்கவோ முடியாது. அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள்மூலமே செல்லப்பிராணிகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.

செல்லப்பிராணிகள் மீது ஸ்பெயின் அரசுக்குக்குத்தான் எவ்வளவு அக்கறை….