இளைஞர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் நடந்த பரிசு போட்டி

271

குறும்படம் எடுக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், சத்யா ஏஜென்சி சார்பில் நடத்தப்பட்ட குறும்படம் போட்டியில் வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 

சென்னை M.R.C நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் சத்யா ஏஜென்சி நிறுவனத்தின் சார்பில் குறும்படம் போட்டி நடத்தி வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் வசந்த் மற்றும் சிம்பு தேவன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு பரிசு வழங்கினர். முழுக்க முழுக்க செல்போனில் மட்டுமே எடுக்கப்பட்ட 5 ஆயிரம் குறும்படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து அவர்களுக்கு முதல் இரண்டு மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது.

முதல் 10 குறும்பட இயக்குநர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், இரண்டாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இளைஞர்களுக்கான ஒரு வாய்ப்பாக இந்த குறும்பட போட்டிகள் நடத்தப்பட்டதாக சத்யா ஏஜென்சியின் நிர்வாக இயக்குநர் ஜான்சன் தெரிவித்தார்.

இளைஞர்கள் தொடர்ந்து ஒரு விடயத்தை முயற்சி செய்தால் அதில் வெற்றி நிச்சயம் என்று கூறிய அவர், குறும்பட போட்டிகள் நடத்தி இளைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான  பரிசுகள் வழங்கி மகிழ்ந்ததாக கூறினார்.