ஓர் உலகப் புகழ்பெற்றக் கவிதையால் சாதாரணப் பூ
நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. ஆச்சரியமாக இருக்கிறதா?
உண்மைதான்.
இங்கிலாந்து மட்டுமன்றி, பல்வேறு நாடுகளிலும் ரூபாய்த்
தாள்களிலும் ஸ்டாம்புகளிலும் இந்தப் பூ இடம்பெற்றுள்ளது.
அந்தப் பூ எது தெரியுமா…?
பாப்பி மலர்.
பாப்பி மலர்களைக் கூட்டமாகப் பார்க்கும்போது சிவப்புக்
கம்பளம் விரித்ததுபோல் காட்சியளிக்கும்.
இந்தப் பாப்பி மலர் நட்சத்திர அந்தஸ்து பெறக் காரணமான
அந்தக் கவிதையின் பெயர் N. FLANDERS FIELDS THE
POPPIES BLOW.
இந்தக் கவிதையை எழுதியவர் கனடாவைச் சேர்ந்த லெப்டினன்ட்
கர்னல் ஜான் மெக்ரே (JOHN MCCRAY).டாக்டரான இவர் ஒரு
போர் வீரர் மட்டுமன்று, சிறந்த கவிஞரும் கூட.
முதலாம் உலகப்போரில் சக போர்வீரரான தன் நண்பன்
கொல்லப்பட்டதை மறக்க முடியாமல் அந்த நண்பன் நினைவாக
இக்கவிதையை எழுதியதாகக் கூறப்படுகிறது.
இக்கவிதை முதலாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களின்
தியாகத்தையும் நினைவையும் போற்றும்விதத்தில் அமைந்திருந்ததால்
உலகளவில் பாராட்டைப் பெற்றது.
போர்வீரர்களுக்குத் தளர்வை நீக்கி, உற்சாகமூட்டுவதாக
அமைந்திருந்தது. இந்தக் கவிதையால் ஈர்க்கப்பட்ட அமெரிக்கப்
பேராசிரியர் ஒருவர் உலகப்போரில் உயிர்நீத்த வீரர்களின்
நினைவாக சிவப்பு நிறப் பாப்பி மலர்களை அணிந்துகொள்ள
வேண்டுமென்று பிரசாரம் செய்தார்.
அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு 1918 ஆம் ஆண்டுமுதல்
போர்வீரர்களின் நினைவு தினத்தில் பாப்பி மலர்களை
அணியும் வழக்கம் ஏற்பட்டது.
அமெரிக்காவில் ஏற்பட்ட இவ்வழக்கம் இங்கிலாந்துக்குப்
பரவி பின்னர் காமன்வெல்த் நாடுகளுக்கும் பரவியதாகக்
கூறப்படுகிறது.
ஏப்ரல் முதல் ஜுன் மாதங்களுக்குள் பாப்பி மலர்கள் பூத்துக்
குலுங்கும். தற்போது பூத்துக் குலுங்கி சிவப்புக் கம்பளம்
விரித்ததுபோல் காட்சியளிக்கிறது பாப்பி மலர்கள்.
முதல் உலகப் போர் முடிந்தவுடன் இங்கிலாந்து பூமியே
பாழடைந்து கிடந்த நேரத்தில் பாப்பி மலர்கள் மட்டும்
பூத்துக்கிடந்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஆகவே, பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும்
அடையாளமாகப் பாப்பி மலர்கள் கருதப்படுகிறது.
எனவே, ஒவ்வோராண்டும் பதினொன்றாம் மாதத்தின்
பதினொன்றாம் நாளில் பதினொரு மணிக்கு பிரிட்டிஷ்
அரசு இந்த நினைவு தினத்தைக் கொண்டாடுகிறது.
வாழ்க்கை இன்னும் முடிந்து போகவில்லை, மறுபடியும்
வாழ்க்கை இருக்கிறது என்னும் நம்பிக்கை இன்னும்
நடைமுறையில் உள்ளது.