தஞ்சையில் டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் போலீசார் கைது செய்தனர்…

97
Advertisement

தஞ்சை மாவட்டம்  தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் 13-வது பட்டமளிப்பு விழா  நடைபெற்றது.

அப்போது,  தமிழக அரசுக்கு எதிராகவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் மார்க்சியத்தை பற்றி தவறாக பேசிய ஆளுநரை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆளுநர் பட்டமைப்பு விழாவில் கலந்து கொள்ளக் கூடாது உடனடியாக வெளியேற வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்திய மாணவர் சங்கத் தலைவர் அவமரியாதை செய்யப்பட்டதாக கூறி தஞ்சை டிஐஜி அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட முயன்றனர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்தனர்.