தூத்துக்குடி அருகே, வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் மற்றும் செல்போனை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்…

78
Advertisement

தூத்துக்குடி தாளமுத்துநகர் மாதா நகரைச் சேர்ந்தவர் அன்னக்கிளி.

இவர் கடந்த 17 ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டு பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அன்னக்கிளி அளித்த புகாரின்பேரில்,  போலீசார் விசாரணை நடத்தி, தாளமுத்துநகர் மாதாநகர் பகுதியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 லட்சத்து 8 ஆயிரம் ருபாய், மூன்றரை சவரன் நகைகள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.