பிரதமர் மோடி தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை: அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை – அண்ணாமலை

273

சென்னை வந்துள்ள பிரதமர் மோடி தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கிருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சென்றார். ஆளுநர் மாளிகையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி நேற்றிரவு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட்டில் தமிழக பாரம்பரிய கலச்சாரத்தை பிரதிபலிக்க வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை பாராட்டு தெரிவித்தார். முதலமைச்சரவை பாராட்டுவதால், தி.மு.க-வுடன் கூட்டணி என்ற அர்த்தம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.