ஸ்னூக்கர் போட்டியில் குறுக்கிட்ட புறா

320
Advertisement

உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்துகொண்டிருந்தபோது
புறா ஒன்று குறுக்கிட்டதால் வீரர்களும் பார்வையாளர்களும் வியப்பில்
ஆழ்ந்தனர்.

46 ஆவது ஆண்டாக உலக ஸ்னூக்கர் சாம்பியனுக்கான போட்டி
இங்கிலாந்திலுள்ள ஷெஃபீல்டு நகரில் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கியது.
மே மாதம் 2 ஆம் தேதி இப்போட்டி முடிவடைந்தது.

2022 ஆம் ஆண்டுக்கான ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்புக்கான
க்ரூசிபிள் தியேட்டர் ஆடிட்டோரியத்தில் நடந்தது.

இதில் இரண்டாவது சுற்றுப்போட்டியில் மார்க் செல்பியும் பிங்டாவோவும்
மோதிக்கொண்டிருந்தனர். போட்டி விறுப்பாக நடந்துகொண்டிருந்தபோது
திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் அரங்கத்தின் கூரையிலிருந்த
புறா ஒன்று பறந்துவந்து ஸ்னூக்கர் மேஜையில் வந்து நின்றது.

இதனால் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீரர்களின் கவனம் சிதறியது.

புறாவின் குறுக்கீடு வீரர்களை மட்டுமன்றி போட்டிக்கு ஏற்பாடு
செய்தவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியது சிறிதுநேர முயற்சிக்குப்
பிறகு புறாவைப் பிடித்து போட்டி ஏற்பாட்டாளர்கள் வெளியேற்றினர்.
அதன்பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

வெளிப்புற அரங்கில் பறவைகள் குறுக்கிடும் என்பதற்காக உள்ளரங்கில்
நடத்தப்பட்ட இந்தப் போட்டியிலும் புறா ஒன்று குறுக்கிட்டது இதுவே
முதன்முறை என்று கூறப்படுகிறது..

அழையா விருந்தாளியாக வந்த புறாவை வறுத்துத் தின்னாமல்
பாதுகாப்பாகப் பிடித்து வெளியேற்றிய விழாக்குழுவினரை
நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர்.

ஆன்லைனில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.