நீலகிரி மாவட்டம் உதகையிலும் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்….

28
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் சதம் அடித்து வரும் நிலையில், நேற்று பலத்த சூறைக்காற்றுடன், மிதமான மழை பெய்தது.

பலத்த சூறைக்காற்றால், திருவள்ளூர் அடுத்த புள்ளரம்பாக்கம் அம்பேத்கர் நகரில், மின்கம்பம் சாய்ந்து மாடுகளின் மேல் விழுந்தது. அப்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் 30க்கும் மேற்பட்ட மாடுகள் உயிர் தப்பின. திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் அருகே சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தகடுகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

திருவள்ளூர் அடுத்த ஒதப்பை பகுதியில் தென்னை மரத்தில் இடி தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.