கோலாகலமாக தீபாவளி கொண்டாடிய மக்கள்

258

தமிழகம் உட்பட நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடினர். புதுமணத் தம்பதிகள் தங்களது தலை தீபாவளியை குடும்பதினரோடு மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்ந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியில் திளைத்தனர்.

சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் குடும்பத்தினருடன், தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். பகலில் வெடி சத்தம் விண்ணை பிளந்த நிலையில், இரவில் மக்கள் வண்ண வண்ண வெடிகளை வெடித்து மகிழ்ந்தனர். இதனால், தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது