பான்,ஆதார் இணைக்க மார்ச் 31 கடைசி …இல்லை என்றால் 1000 ரூபாய் அபராதம் – மத்திய அரசு

499
Advertisement

2017ம் ஆண்டு பான் கார்டு எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.பின்னர் பான் – ஆதார் இணைப்புக்கு வழங்கப்பட்ட அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டுகொண்டே வந்தது. இதற்கான அவகாசம் வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இனி கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 31ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.