ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்வார்கள்
என்கிற கருத்து நம்மிடையே உள்ளது.
என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஏமாறுவதும் ஏமாற்றுவதும்
ஏமாறுவதும் தொடர்கதையாகவே உள்ளது.
செல்போனுக்குப் பதிலாக செங்கல், புது ஆடைகளுக்குப் பதிலாக பழைய
டிரஸ் என்று புதுப்புது மோசடிகள் தொடரத்தான் செய்கின்றன. அந்த ரகத்தில்
இது புது ரகம்.
டெல்லியைச் சேர்ந்தவர் விக்ரம் புரகோஹைன். இவர் பிரபலமான அமேசானில்
ரிமோட் கண்ட்ரோல் கார் ஒன்றுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். ஆர்டர் டெலிவரி
செய்யப்பட்டது. சந்தோஷத்தில் பார்சலைப் பிரித்துப் பார்த்தார்…சங்கோஜப்பட்டார்.
பார்சலினுள்ளே இருந்தது பிரபலமான பார்லேஜி பிஸ்கட்…
உடனே மனுஷனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்திருக்குமேன்னுதானே
நீங்க நெனைக்கிறீங்க…
இல்லவே இல்ல… ரொம்ப ஜாலியான மனுஷன் விக்ரம். தான் ஏமாற்றப்பட்டது
குறித்து சிறிதும் வருந்தாமல், வேடிக்கையாகத் தனது பேஸ்புக்கில் இதுபற்றிக்
குறிப்பிட்டுள்ளார். எப்படித் தெரியுமா…?
”அமேசானிலிருந்து ஆர்டர் செய்ததுக்குப் பதிலாக பார்லேஜி பிஸ்கட் கிடைத்தால்
என்ன செய்வது? உடனே டீ போட்டு அதில் முக்கி பிஸ்கட்டை திங்க வேண்டியதான்”
என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் குழந்தையாகவே இருக்கிறார். தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்
என்கிற எண்ணமே இல்லாமல்….