பெண் என்று நினைத்து ஆணைத் திருமணம்
செய்த இளைஞர் 5 ஆண்டுகள் கழித்து விவாக
ரத்து கோரி நீதிமன்றப்படி ஏறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் நகரைச்
சேர்ந்த ஓர் இளைஞருக்கு 2016 ஆம் ஆண்டில்
திருமணம் நிகழ்ந்தது. திருமணமான சமயத்தில்
தம்பதிக்குள் தாம்பத்திய உறவு இல்லாமல் இருந்துள்ளது.
மனைவி தயங்கியதால் அவசரப்படாமல் தாம்பத்
தியத்துக்குப் பொறுமை காத்தார் அந்த இளைஞர்.
என்றாலும், சில மாதங்கள் கழித்து சாந்தி முகூர்த்தம்
நடந்தது.
அப்போது மனைவியின் பிறப்புறுப்பில் ஆணுப்புபோல்
ஏதோவொன்று இருப்பதாக கணவருக்கு சந்தேகம் வந்தது.
அதனால் மறுநாள் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு
அழைத்துச்சென்றார்.
அதில் மனைவிக்கு மரபணுக்கோளாறு இருப்பது தெரியவந்தது.
அதை Congenital adrenal hyperplasis என்று
பரிசோதனை செய்த டாக்டர் கூறினார். அதன்காரணமாக
மனைவியின் பிறப்புறுப்பில் ஆண்களுக்கான பிறப்புறுப்புபோல்
ஒன்று உள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து தன் மனைவியைப் பிறந்தகத்துக்கே
அனுப்பிவிட்டார் அந்த இளைஞர். இதனால் இரு குடும்பத்
தினருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
கணவன் கொடுமைப்படுத்துவதாக மனைவி வீட்டாரும்,
மனைவி ஏமாற்றிவிட்டதாக கணவர் வீட்டாரும் மாற்றி
மாற்றி போலீசில் புகார்கொடுத்தனர்.
பிறகு, இதுதொடர்பான வழக்கு தொடரப்பட்டது.
மனைவிக்குப் பெண்ணுறுப்பே இருப்பதாகவும்,
அப்பெண் நலமுடன் இருப்பதாகவும் கூடுதலாக
இருப்பது மரபணுக்கோளாறால் வந்தது என்றும்,
அதை அடிப்படையாகக்கொண்டு விவாக ரத்து
வழங்கமுடியாது என்றும் மத்தியப்பிரதேச
உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தற்போது அந்தக் கணவர் விவாக ரத்து கேட்டு
உச்சநீதிமன்றத்துக்குச் சென்றுள்ளார்.