ஷ்யா ,உக்ரைன் போர் நடந்துவருவதால் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த , உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு 4 அமைச்சர்களை மத்திய அரசு அனுப்பி வைக்கவுள்ளது .
உக்ரைனில் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் , அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் ரயில் மூலமாக உக்ரைன் எல்லைப் பகுதிக்கும், அங்கிருந்து அண்டை நாடுகளுக்கும் கொண்டு வரப்படுகின்றனர். பின்னர் விமானம் மூலமாக இந்தியா அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.இந்தப் பணியில் மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் புரி, கிரண் ரிஜிஜு, ஜோதிராதித்ய சிந்தியா, வி.கே. சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ரொமேனியாவுக்கு செல்லவுள்ளனர்.