ஒரு கண்ணாடி பாட்டில் எடுத்துக்கொண்டு ,அதில் தோலுரித்த இரண்டாகக் கீறிய சின்ன வெங்காயத்தைப் போட்டு அது முழுகும் அளவுக்கு தேனை ஊற்றவும் .இரண்டு நாட்கள் கைபடாமல் எடுத்துவைத்தால்
சின்ன வெங்காயத்தில் தேன் நன்றாக இறங்கியிருக்கும்.
இதை காலையில் எழுந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்,அஜீரணக் கோளாறு உண்டாவது தடுக்கப்படும்.
உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, ரத்தத்தில் உ்ளள பிற கழிவுகளை வௌியேற்றுவதோடு ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றுகிறது. மூச்சுப் பிரச்சினைகள், ஆஸ்துமா, சளித் தொல்லை நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சின்ன வெங்காயம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.இந்த தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும்.