தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனத்தின் சார்பாக, “நெய்தல் உப்பு” என்ற பெயரில் உப்பு விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

372

தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனத்தின் சார்பாக, “நெய்தல் உப்பு” என்ற பெயரில் உப்பு விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உப்பளத்தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணத்தொகையை வழங்கினார். இதைத்தொடர்ந்து, நெய்தல் உப்பு விற்பனையையும் முதல்வர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கனிமொழி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து, சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, உலாமாக்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.மேலும், தமிழ்நாடு மாநில ஹஜ்குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட பயனாளிகளுக்கு மானியத்தொகையையும் முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.