தேர்தலில் மத்தியில் 3வது அணிக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ள ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், நாடாளுமன்ற தேர்தலில் பிஜூ ஜனதா தளம் தனித்து போட்டியிடும் என தெரிவித்துள்ளார்….

109
Advertisement

ஒடிசா முதலமைச்சரும், பிஜூ ஜனதா தளம் கட்சி தலைவருமான நவீன் பட்நாயக், டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை புரிக்கு மாற்றுவது தொடர்பாக பேசியதாகவும் தெரிவித்தார். தலைநகர் புவனேஸ்வரத்தில் பெருகிவரும் வாகன போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, தலைநகரை விரிவாக்கம் செய்வதற்கான திட்டங்கள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

டெல்லியில் வேறு எந்த தலைவர்களையும் சந்திக்கும் திட்டம் இல்லை என்றும் கூறினார். நிதிஷ்குமாருடான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று குறிப்பிட்ட அவர், மத்தியில் 3வது அணிக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிஜூ ஜனதா தளம், எதிர்க்கட்சி தலைவர்குளுடன் கூட்டணி வைக்காமல், தனித்து போட்டியிடும் என்றும், நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.