இயர்போன் ஆர்டர் செய்தவருக்கு காலி டப்பாவை அனுப்பிய ஃபிளிப்கார்ட்

267
earphone
Advertisement

இயர்போன் ஆர்டர் செய்தவருக்கு ஃபிளிப்கார்ட் நிறுவனம் காலி டப்பாவை அனுப்பியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் பராஸ் கல்னாவாத் ஃபிளிப்கார்ட் வலைத்தளத்தில் Nothing Ear-1 என்ற இயர் போனை ஆர்டர் செய்துள்ளார்.ஆனால் அவருக்கு காலியாக உள்ள இயர்போன் டப்பாவை மட்டும் ஃபிளிப்கார்ட் அனுப்பி வைத்தது.

இதனையடுத்து நடிகர் பராஸ் கல்னாவாத் தனக்கு நேர்ந்த அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்தார். Nothing In nothing box From Flipkart என கிண்டலடிக்கும் தொனியில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை டேக் செய்து கருத்து தெரிவித்தார்.

இந்த ட்வீட் வைரலான நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

இயர்போன் ஆர்டர் செய்தவருக்கு ஃபிளிப்கார்ட் நிறுவனம் காலி டப்பாவை அனுப்பிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.