”எனக்கு யாரும் பெண் தரல”
போலீசில் புகார்கொடுத்த குள்ள மனிதர்

149
Advertisement

நான் குள்ளமாக இருப்பதால் திருமணத்துக்குப் பெண் தர மறுக்கிறார்கள். நீங்களே எனக்குப் பெண் பார்த்துத் தாருங்கள் என்று புகார் கொடுத்த குள்ள மனிதரின் செயல் வலைத்தளங்களில் வலம்வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லி பகுதியைச் சேர்ந்தவர் அசிம் மன்சூரி. 26 வயதான இவர் இரண்டடி, மூன்று அங்குல உயரமே வளர்ந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் இவரை சின்ன மனிதர் என்று அழைத்து வருகின்றனர்.

குள்ளமான தோற்றம் காரணமாக மன்சூரி தனக்கு மணமகள் தேவை என்னும் வழக்கத்துக்கு மாறான கோரிக்கையுடன் காவல்நிலையத்தை அணுகியுள்ளார்.

Advertisement

அந்தக் கோரிக்கையில் குறைவான உயரம் காரணமாக என்னைத் திருமணம் செய்துகொள்ள யாரும் விரும்பவில்லை. எங்கு தேடியும் எனக்கு மணமகள் கிடைக்கவில்லை. அதனால் நீங்களே பெண் பார்த்து எனக்குத் திருமணம் செய்துவையுங்கள் என்று கோரியிருந்தார்.

அதற்குப் போலீசாரும் மணப்பெண்ணைக் கண்டுபிடிக்க உதவிசெய்வதாக உறுதியளித்தனர். அந்த உறுதி தற்போது நிறைவேறியுள்ளது.

ஹபூர் நகரைச் சேர்ந்த 27 வயதான பிகாம் பட்டதாரிப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து மன்சூரின் திருமணத்துக்கு முடிவுசெய்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார் மன்சூரி.

2019 ஆம் ஆண்டில் அப்போதைய உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷிடமும் மணப்பெண்ணைக் கண்டுபிடிக்க உதவி கோரியிருந்தார் மன்சூர்.

மணப்பெண் கிடைக்காத இளைஞர்கள் இனி இப்படியும் யோசிக்கத் தொடங்கிவிடுவார்களோ…