இந்தப் பயிற்சி செய்யுங்க வேறெந்த பயிற்சியும் தேவையில்ல

233
Advertisement

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின்
அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.

மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம்
போட்டால் வேறெந்த உடற்பயிற்சியும் செய்யத்
தேவையில்லை.

தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப்
பிடித்துக்கொள்கிறோம். உடலின் எல்லா உறுப்புகளையும்
இணைக்கும் புள்ளிகள் காது மடல்களில் உள்ளன.

காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான
தூண்டுதல் கிடைக்கிறது. இதனால் உடல் இயக்கம் சீராகிறது.

தோப்புக்கரணம் போடவிரும்பும் ஒருவர் அவருடைய
தோள்பட்டை அகலத்துக்கு கால்களை விரித்துவைத்துக்
கொண்டு வலது கைவிரல்களால் இடது காது மடல்களையும்,
இடது கைவிரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக்
கொண்டு உட்கார்ந்து எழவேண்டும்.

உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது
மூச்சை வெளியே விடவேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து
வெளியே விடுவதால், நமது தண்டுவடத்தில் மூலாதாரத்தில் சக்தி
உருவாகும். இரத்த ஓட்டம் சீராகும்.

செலவில்லா உடற்பயிற்சி தோப்புக்கரணம். தோப்புக்கரணம் போட
நேரங்காலம் இல்லை. பெரிய இடமும் தேவையில்லை.

தோப்புக்கரணம் போடுங்க… தோரணையா வாழுங்க….