https://www.instagram.com/tv/CWlm0HCK1LV/?utm_source=ig_web_copy_link
திருமணத்தைவிட தேர்வுகளுக்கு முன்னுரிமை அளித்து முழுத் திருமண அலங்காரத்துடன் தேர்வு மையத்துக்கு வந்து பல்கலைக் கழகத் தேர்வு எழுதி அநேகம் பேரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரைச் சேர்ந்தவர் ஷிவாங்கி பகாரியா. அங்குள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை சமூகப் பணி பட்டப் படிப்பு மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமணத் தேதி குறிக்கப்பட்டபோது தேர்வுத் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
பிறகு, தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டது. திருமணத் தேதியன்று தேர்வு நடைபெறுவதாக இருந்தது.
அதையறிந்த மணமகன் குடும்பத்தினர் திருமணத்தையே ரத்துசெய்ய நினைத்துள்ளார் வருங்காலக் கணவர். ஆனால், மணப்பெண் தனது பெற்றோரிடமும், வருங்காலக் கணவர் குடும்பத்தாரிடம் திருமணத் தேதியை மாற்றியமைக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, தனது வருங்காலக் கணவர் மற்றும் வருங்கால மாமியார் குடும்பத்தினரோடு மணப்பெண் உடையலங்காரத்தில் கல்லூரிக்குச் சென்று 5ஆவது செமஸ்டர் தேர்வு எழுதினார்.
திருமணத்தைவிட எனது பட்டப் படிப்பு முக்கியமானது. பெண்கள் உள்பட அனைவருக்கும் கல்வி அவசியம். பெற்றோரும் பெண்களும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் புதுப்பெண் ஷிவாங்கி பகாரியா.
ஷிவாங்கியும் அவளின் பெற்றோரும் தேர்ந்தெடுத்த பாதை இன்றைய காலகட்டத்தில் கல்விக்கு அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.