தங்கம் போல் ஜொலிக்கும் புதிய கிரகம் விஞ்ஞானிகள் சாதனை!

164
Advertisement

ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்பை பயன்படுத்தி, ஜெர்மனியை சேர்ந்த தாமஸ் மிகல்-எவன்ஸ் தலைமையிலான விஞ்ஞானிகளின் குழு,

வியாழன் கோளான WASP-121 b இன் வளிமண்டல பண்புகளை ஆய்வு செய்தது.2015 ஆம்வருடத்தில் 855 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பப்பிஸ் விண்மீன் தொகுப்பில் இந்த எக்ஸோப்ளானெட்டைக் கண்டுபிடித்தனர்.

அங்கு உலோக நீராவி மேகங்களைக் கொண்ட சிஸ்லிங் எக்ஸோப்ளானெட் எனப்படும் கோளில், திரவ பளபளப்பான உலோக மழை பொழிவதாக வானியலாளர்கள் நம்புகின்றனர்.

Advertisement

நமது பூமியில் நீர் ஆவி ஆவது போல் இந்த சிஸ்லிங் எக்ஸோப்ளானெட்டில் வெப்பமான பகல்நேரத்தில், உலோகங்கள் மற்றும் தாதுக்கள் ஆவியாகும். ​​

குளிரான இரவில், உலோக மேகங்கள் மற்றும் திரவ பளபளப்பில் ஆன மழை பொழிகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் .