இனி Easyஆ உப்புத்தண்ணிய நல்ல தண்ணியா மாத்தலாம்

364
Advertisement

நாம் வாழும் பூமியில் 75 சதவீதம் தண்ணீரால் நிறைந்திருந்தாலும், 2.5 சதவீதம் மட்டுமே நல்ல தண்ணீராக உள்ளது.

பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி, நகரமயமாதல், தீவிரமடைந்து வரும் பருவநிலை மாற்றம் முதலிய காரணங்களால் நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்து விட்டது.

தண்ணீர் தேவையை சமாளிக்க கடல் நீரை desalination என அழைக்கப்படும் உப்புநீக்க முறைப்படி குடிநீராக மாற்றும் திட்டம் ஏற்கனவே பல நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது.

எனினும், இந்த முறை அதிக நேரம் எடுக்க கூடிய மற்றும் பணமும் அதிகம் செலவாகக்கூடிய ஒன்றாக உள்ளது.

இதற்கு மாற்றாக, டோக்கியோவை சேர்ந்த பேராசிரியர் ஈடோ புதிய முயற்சியை மேற்கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

பொதுவாக, கார்பன் nano tubeஐ பயன்படுத்தி உப்புநீக்கும் முறையை விட, ஈடோ பயன்படுத்தும் Flourine nano tubeஇல் 1000 மடங்கு வேகமாக நீரை சுத்திகரிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

கடல்நீரை குடிநீராக மாற்றும் ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.