திண்டிவனம் அருகே, பல்வேறு இடங்களில் திருடிய நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

104
Advertisement

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான கார் செட்  இயங்கி வருகிறது.

இந்த கடையில் 2 ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள், ஒரு லட்சம் ரூபாய்  திருட்டு போனது. அதேபோல், சாரம் பகுதியில் ஜெயந்தி என்பவரது வீட்டில் டிவி, சிலிண்டர், 20 ஆயிரம் ரூபாய், இன்வெர்ட்டர் ஆகியவை திருட்டு போனது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில், திண்டிவனம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான ஆட்டோவில் சுற்றுத்திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் புதுச்சேரி  மாநிலத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பதும், பல்வேறு பகுதிகளில் திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 2 ஆட்டோ, 20 ஆயிரம் ரூபாய், இன்வெர்ட்டர், டிவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.