தேனி அருகே, புள்ளிமானை வேட்டையாடிய 3 பேரை கைது செய்த வனத்துறையினர், மான் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்….

23
Advertisement

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அஞ்சரப்புலி மலைப்பகுதியில் தீ வைத்து புள்ளிமான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், அஞ்சரப்புலி மலைப்பகுதியில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற அஞ்சரப்புலி பகுதியைச் சேர்ந்த முருகன், சுந்தர், ஆசைத்தம்பி ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.  அதில், 3 பேரும் புள்ளிமானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டது தெரிய வந்தது. அதனையடுத்து, 3பேரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடமிருந்து 5 கிலோ மான்கறியை பறிமுதல் செய்தனர்.