சத்தியமங்கலம் அருகே, வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்…

25
Advertisement

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வசித்து வரும் யானைகள் உணவு தேடி அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், 

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குய்யனூர் பிரிவு அருகே வாகனங்களை வழிமறுத்தபடி மரக்கிளைகளை வளைத்து உண்டுகொண்டிருந்தது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தனர்.