விபத்துக்கு உள்ளாகிய அரசு பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்

180

திருப்பூர் அருகே, அரசுப் பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து ஆமந்தக்கடவு அம்மாபட்டிக்கு அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சனுப்பட்டி வல்லகுண்டபுரம் பகுதியில்சென்றுபோது, நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. இதில், பள்ளி மாணவர்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார், காயமடைந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.