விரைவில் மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

303

மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, புதிதாக பொருத்தப்படும் ஸ்மார்ட் மீட்டருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்தார். ஸ்மார்ட் மீட்டர் பணிகள் முடிந்ததும் மாதாந்திர கட்டணம் நடைமுறைக்கு வரும் என உறுதி அளித்தார்.