நேற்று மகளிர் தினம் உலகம் முழுதும் அனுசரிக்கப்பட்டது . பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் மகளிருக்கு வாழ்த்துகள் சொன்னதோடு ,பெண்களின் சக்தி மற்றும் பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளுக்கு தலைவணங்குவதாக தெரிவித்துள்ளார் .
நிதி, சமூக பாதுகாப்பு, கல்வி, தொழில் முனைவு என பல துறைகளிலும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் நமது நாட்டு பெண்களின் சக்தியை முன்னணியில் எடுத்துச் செல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ,இந்த முயற்சிகள் வரும் காலங்களில் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும் என்றும் கவுரவம் மற்றும் வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் தனது தலைமையிலான அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.