காயலான் கடையில் வாங்கிய மோதிரத்தால் லட்சாதிபதியான பெண்

381
Advertisement

பழைய பொருட்கள் வாங்கும் கடையில் வாங்கிய மோதிரம் ஒன்றால் திடீர் லட்சாதிபதி ஆகியுள்ளார் ஒரு பெண்மணி.

இங்கிலாந்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணி தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்ட விரும்பினார். அதற்காக பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடைக்குச் சென்று மோதிரம் ஒன்றை வாங்கினார். அதன் விலை அரை பவுண்ட்.

பழைய கலைப்பொருட்களுக்கு விலை மதிப்பு அதிகம் என்பதால் அந்த மோதிரத்தை விற்று நிதிதிரட்ட முடிவுசெய்தார். அதையடுத்து அரை பவுண்டுக்கு வாங்கிய அந்த மோதிரத்தை விற்பனை செய்ய முன்வந்தார்.

இந்த நிலையில் கலைப்பொருட்கள் சேகரிப்பில் ஆர்வமுள்ள ஒருவர் அதை வாங்க ஆர்வம் காண்பித்தார். மோதிரத்தை வாங்கும்முன் அதைப் பரிசோதிக்க விரும்பினார். இதற்காக அந்த மோதிரத்தை நிபுணர் ஒருவரிடம் காண்பித்தார்.

அதைப் பரிசோதித்த நிபுணர் இந்த மோதிரம் 22 காரட் தங்கத்தால் செய்யப்பட்டது என்றும், 1790 1800 ஆம் ஆண்டுகளுக்கிடையே நடைபெற்ற முகலாயர் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது என்றும், தாஜ்மஹாலுக்கு அருகே உள்ள இடத்திலிருந்து இங்கிலாந்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

அந்த மோதிரத்தின் நடுவில் ஒரு கல்லும், அதைச்சுற்றி சிவப்பு நிற மாணிக்கக் கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. அதை மீண்டும் பரிசோதித்தபோது அது வைரக்கல் என்று தெரியவந்தது.

அதன் இன்றைய மதிப்பு 2 ஆயிரம் பவுண்ட்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திடீர் அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடிப் போயுள்ளார் அந்தப் பெண்மணி.

தொண்டுள்ளம் படைத்த பெண்ணுக்கு இறைவன் அள்ளிக்கொடுக்கிறான்.