தகாத உறவைக் கண்டித்த மனைவியை கொலை செய்த ராணுவ வீரர்!

426
Advertisement

தகாத உறவைக் கண்டித்த மனைவியை கொலை செய்து புதைத்த ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கீழரத வீதியை சேர்ந்த மாரியப்பன் – பிரேமா தம்பதிக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

ராணுவத்தில் பணியாற்று வரும் மாரியப்பன், வேறு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பிரேமா மாரியப்பனை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மாரியப்பன், பிரேமாவை கொலை செய்து, திருக்குறுங்குடி பெரிய குளம் அருகே புதைத்துள்ளார்.

இதைதொடர்ந்து நேற்று திருக்குறுங்குடி கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து, மனைவியை கொலை செய்து புதைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாரியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே மாரியப்பன் பணியின் போது, தகராறில் ஈடுபட்டதால் அவர் ஏற்கெனவே பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.