வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டில், சூறாவளி புயல் தாக்கியுள்ளது.
அஹதா என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி புயல், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அஹ்சகா மாகாணத்தை தாக்கியது.
கடுமையான சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
இதன் காரணமாக மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சூறாவளி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.