விவசாயிகளை மகிழ்வித்த மேட்டூர் அணை

205

மேட்டூர் அணை நடப்பாண்டில் 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர் மழை காரணமாக நடப்பாண்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. இதனால் மேட்டுரில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் உபரிநீர் கால்வாய் அமைந்துள்ள தங்கமாபுரி பட்டினம், அண்ணா நகர், பெரியார் நகர் பகுதிகளில் வருவாய் துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், காவிரி கரையோரம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தினர்.