தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

29

தமிழகத்தில் காஞ்சிபுரம், சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்த நிலையில், தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கனமழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரத்தில் பெய்த திடீர் மழையால், பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.