தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் இன்று தொடங்குவதால், வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது…

157
Advertisement

தமிழகத்தில் கோடை வெப்பம் கொளுத்தி வந்த நிலையில், பல மாவட்டங்களில் வெப்பநிலை சதம் அடித்து வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருவதால், வெப்பம்  தணிந்து இதமான சூழல் நிலவுவதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது. கத்தரி வெயில் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மே 5 முதல் மே 7ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.