வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல், மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் வங்கதேசம் – வடக்கு மியான்மர் இடையே நாளை மறுநாள் கரையை கடக்க உள்ளது….

172
Advertisement

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை புயலாக வலுப்பெற்றது.

இது மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு மே 12 வெள்ளிக்கிழமைக்குள் ஒரு சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது, அங்கு காற்றின் வேகம் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் மணிக்கு 130 கி.மீ.

இந்த புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல், மேலும் வலுவடைந்து நேற்று மாலை தீவிர புயலாக மாறியது. இந்த புயல் வங்கதேசம் – வடக்கு மியான்மர் இடையே நாளை மறுநாள் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் புயல் உருவாகியிருப்பதை எச்சரிக்கை செய்யும் விதமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.