வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், நெல்லையில்  நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சொல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்….

99
Advertisement

வங்கக்கடலில் வரும் 3 நாட்கள் சூறாவளி காற்று வீசும் என்பதால்,

வரும் 9 ஆம்தேதிவரை நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், நெல்லை மாவட்டம் கூடன்குளம் அருகே உள்ள கடற்கரை கிராமங்களான கூட்டப் புளி, பெருமணல், பஞ்சல், இடிந்தகரை,

கூத்தன் குழி, தோமையார்புரம், உவரி, கூட்டப்பனை, கூடுதாழை கிராமங்களில் உள்ள சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அவர்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.