சேலையுடன் மருதாணி ரவிக்கை பார்த்திருக்கிறீர்களா?

henna-blouse

மருதாணி ரவிக்கை அணிந்த பெண்ணின் வீடியோ ஆன்லைனில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஓர் இளம்பெண் சேலை உடுத்தி மிடுக்காக நடந்துவருகிறார். அவர் அணிந்துள்ள ரவிக்கை அனைவரையும் கவர்ந்துள்ளது. காரணம், வழக்கமான துணி ரவிக்கைக்குப் பதிலாக மருதாணியால் உடம்பில் ரவிக்கைபோல் வரைந்துள்ளார்.

பெண்களின் அழகுக்கு அழகுசேர்ப்பது சேலையும் ரவிக்கையும்தான். எத்தனை நவீன உடைகள் வந்தாலும் பாரம்பரியமான சேலை, ரவிக்கையை மிஞ்சமுடியாது. என்றாலும், மருதாணி இலைகளை அரைத்து அதனைத் துணி ரவிக்கைக்குப் பதிலாக ஜாக்கெட்போல் உடம்பில் வரைந்துள்ளது பாரம்பரியத்தை மிஞ்சிவிட்டது. துணியால் தைக்கப்பட்டுள்ள ஆடைபோல் தத்ரூபமாக அமைந்துள்ளது இந்த மருதாணி ரவிக்கை.

பெண்களுக்கு இயல்பாகவே அழகுணர்வு உண்டு. அந்த வகையில் அவர்களின் உணர்வை வெளிப்படுத்திய விதமே மருதாணி ஜாக்கெட் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

வைரலாகியுள்ள இந்த வீடியோவைப் பார்த்த பலர் புதுமை, அழகுணர்வ என்கிற பெயரில் இன்னும் என்னென்ன வருமோ எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!