நாளை மெகா தடுப்பூசி முகாம்

394

தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருதால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.